தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார்! – ஹெச்.ராஜா பரபரப்பு

ப. சிதம்பரம் போல் தமிழகத்தில் ஓர் எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை, செப்-13

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-

“ஊழல் செய்த சிதம்பரத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளது வேதனைக்குரியது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைப் போன்று, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாக உள்ளார். தி.மு.க தனது இலவச இணைப்பில் உள்ள இரு கட்சிகளைக் கழற்றிவிட்டால், அது அவர்களுக்கு நல்லது.

தமிழக அரசு நீர் மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அதிகளவில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். நீர் மேலாண்மைக்காக முதல்வர் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் உள்ள வங்கிகளையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி சிதம்பரம். விவசாயிகள் என்ற பெயரில் பெரிய முதலாளிகள் விவசாய நகைக் கடன் வாங்குகின்றனர்.

உண்மையான விவசாயிகளுக்கு நகைக் கடன் கிடைப்பதற்காகவே மத்திய அரசு நகைக் கடன் வழங்குவதில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் தவறாகச் சித்திரித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புகிறார்கள்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *