தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா: ட்விட்டர் விமர்சனம்

சென்னை, நவம்பர்-29

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் மூன்று ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்தது. இந்த நிலையில், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் அவரது ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலும், படத்தை பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *