தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!!

சென்னை, நவம்பர்-29

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகக் கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல் டிச. 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் தஞ்சை மாவட்டம் கீழ்பகுதியில் 12 செ.மீ மழையும், அரியலூர் மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

மீனவர்கள் சூறாவளி காற்று வீசுவதால் இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல், நாளை தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல் மற்றும் மாலத் தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்று மிதமான மழையும், நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *