மின்சார ஆட்டோ திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, நவம்பர்-29

எம்-ஆட்டோ என்ற மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோ திட்டத்தை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை தொடங்கி வைத்துள்ளார். மாசில்லா தமிழகம் என்ற திட்டத்தின்படி இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சார ஆட்டோ தமிழகத்தில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதன் பின் எம்-ஆட்டோ திட்டத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை மின்சார ஆட்டோவை இயக்க முடியும். டிசி சார்ஜிங் மூலமாக 30 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகக்கூடிய வசதி மின்சார ஆட்டோவில் உள்ளது.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதேபோல கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *