பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, நவம்பர்-29

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

பொங்கலை முன்னிட்டு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தலா ஒரு கிலோவும், 2 அடி நீள கரும்பு துண்டு, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் இடம்பெறுகின்றன.

இதற்காக, தமிழக அரசு 2 ஆயிரத்து 363 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *