கோயம்பேட்டில் 3-ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்

சென்னை, நவம்பர்-28

கொடுங்கையூரை தொடர்ந்து இரண்டாவது மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொடங்கி வைக்க இருக்கிறார். இதன் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் உற்பத்தி செய்யப்படும் நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் லிட்டராக உயர்ந்துள்ளது.

கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் மறுசுழற்சி செய்து அதனை பயன்படுத்தும் வகையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வீணாக நீர் நிலைகளில் கலந்து கடலில் கலக்கிறது.

இதனை தடுக்க, சென்னையில் பல்வேறு இடங்களில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் கழிவு நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பெறப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு நீர் நிலைகளில் விடப்பட்டு வந்தன. தற்போது சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பட்டும் கழிவுநீரானது, 3 ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து அந்த நீரை மீண்டும் மக்கள் பயன்படுத்தும் அளவுக்கும் மற்றப்படுகிறது.

முதல் மற்றும் 2ம் நிலை சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீரில் இருக்கும் திடப்பொருட்கள் அகற்றப்பட்டு முழுமையான கழிவு நீராக 3 ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன. அங்கு பெறப்படும் கழிவுநீரை முதலில் கிருமிகளை அழிக்கும் பணி நடக்கும். அதனைத்தொடர்ந்து கழிவுநீரில் இருக்கும் மண் துகல்களை அகற்றும் பணி முடிந்தவுடன் தண்ணீரை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

இந்த மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஏதுவாக இந்த நீர் சுத்திகரிப்படைகிறது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள  தொழிற்சாலைகளுக்கு இந்த சுத்திகரிப்பு நீர் கொண்டு செல்லப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *