மேற்கு வங்க இடைத்தேர்தல்: 3 தொகுதிகளையும் கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா, நவம்பர்-28

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 3 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

கடந்த 25-ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள கலியாகஞ்ச், கராக்பூர் சதார், கரிம்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் கலியாகஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் கமல் சந்திர சர்க்காரைக் காட்டிலும் 2 ஆயிரத்து 418 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தபன் தேப் சின்ஹா வெற்றி பெற்றார்.

கராக்பூரில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி என்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். தன் கைவசம் வைத்திருந்த ஒரு எம்எல்ஏ தொகுதியை பாஜக இழந்துவிட்டடது.

மூன்றாவது தொகுதியான கரிம்பூரில் பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரைக் காட்டிலும் 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிமாலென்டு சின்ஹா ராய் முன்னிலை வகித்த நிலையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கலியகஞ்ச் மற்றும் கரக்பூர் தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் முதல் முறையாகக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *