ப.சிதம்பரம் ஜாமீன் மனு-தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி, நவம்பர்-28

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் 3 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *