கடலூர்,நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை.நவம்பர்.27

கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வெப்பச் சலனம்  காரணமாக  தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. புதன் இரவு மற்றும் வியாழன் அன்று கடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலையம்  அறிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தாண்டு  வடகிழக்குப் பருவமழையால் கிடைக்கப் பெறும் மழை  அளவு இயல்பை விட குறைவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இராமநாதபுரத்தில் மட்டும் சராசரியை விட கூடுதல் மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *