நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் எப்போது? இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

சென்னை.நவம்பர்.27

சந்திராயன் -3 திட்டத்திற்கான பணிகள்  நடைபெற்று வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன்  தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் அதிநவீன செயற்கைகோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது  குறித்து பெருமிதம் அடைவதாக தெரிவித்தார். சந்திரயான்-3 திட்டம் குறித்த ஏற்பாடுகள் நடைபெற்று  வருகிறது, சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து பேசி வருகிறோம். எப்போது செயல்படுத்தப்படும் என முடிவாகவில்லை’  ஆனால் நிச்சயம்  சந்திராயன் 3 திட்டம்  உண்டு என்று கூறினார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று கூறிய சிவன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 6 ராக்கெட் திட்டம் மற்றும் ஏழு செயற்கைக்கோள்கள் திட்டம் என 13 விண்வெளி திட்டப் பணிகள் வரிசையாக உள்ளதாக  விளக்கினார். சந்திராயன் 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மற்றும் சூரியனை பற்றி ஆராயும் ஆதித்யா-எல் 1 திட்டம் ஆகியவை பாதிக்காது என்றும் சிவன் உறுதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *