வெளியானது தர்பாரின் சிங்கிள் டிராக்….கிழி கிழினு கிழிச்சுட்டாங்க!!!

சென்னை, நவம்பர்-27

பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்தது. இதைத் தொடர்ந்து ‘தர்பார்’ படத்தின் முதல் சிங்கிள் டிரக்கான ‘சும்மா கிழி’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியை மனதில் வைத்து அனிருத் போட்டிருக்கும் இசை ஆட்டம்போட வைக்கிறது. அதுமட்டுமில்லாமல், இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ரஜினிக்காக மட்டுமே இந்த பாடலானது எழுதப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட, பாடலை எஸ்.பி.பி பாடியிருப்பது கூடுதல் சிறப்பு…

நான் தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங்கு, நான் தான் லீடு, பில்லா என் வரலாறு, பாத்தவன் நான் பலபேரு, உன்னோட பேட்டைக்கு நான் தான்டா லார்டு என்று துவங்கும் சும்மா கிழி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *