சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை: நாடாளுமன்றத்தில் வைகோ

 டெல்லி.நவம்பர்.27

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என  நாடாளுமன்றத்தில்  மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், உச்ச நீதிமன்றம் அளிக்கின்ற தீர்ப்பில்,  வழக்கு தொடுத்தவர்கள், மனநிறைவு பெறாத நிலையிலோ,  தீர்ப்பு  தவறானது எனக் கருதினாலோ உச்ச நீதிமன்றத்தை நாடாலாம். ஆனால்,தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள், உச்ச நீதிமன்றத்தை எளிதில் நாட முடியாத நிலை உள்ளது என கூறினார். மொழி வேறுபாடு, நெடுந் தூரப்பயணம், அதிக போக்குவரத்து கட்டணம், டெல்லியில் தங்குதற்கான செலவு,வழக்குரைஞர்கள் கட்டணம்  போன்றவை   நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.  மேலும் , இதற்கான பயண நேரம் ,பண விரயம்,  அலைச்சல் போன்றவைற்றை எதிர் கொள்ளவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய காரணங்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்கள், உச்ச நீதி மன்றத்தில் இருந்து உரிய நீதியைப் பெறுவதற்கு தடையாக உள்ளன.

வட இந்தியபகுதிக்கு அடுத்து தென்னிந்தியாவிலிருந்து தான் அதிக வழக்குகளில் மேல் முறையீடு செய்யப்படுகின்றன.

 எனவே  நிரந்தரக் கிளையை, தென்இந்தியாவில் நிறுவினால் மட்டுமே, நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க முடியும். ஏழை, எளிய மக்கள் எளிதில் நீதிமன்றத்தை அணுக முடியும்,வழக்குரைஞர்களுக்கும் வசதியாக இருக்கும் என்று வைகோ கூறினார்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 21, எல்லோருக்கும் பொது நீதி கிடைப்பதை, அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது. எனவே தென்னிந்திய மக்களுக்கு உரிய நீதி கிடைத்திட ,சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை நிறுவது அவசியம் என வைகோ பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *