குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: 29ம் தேதி தொடக்கம்

சென்னை.நவம்பர்.27

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வருகிற 29-ஆம் தேதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு,   அரிசி வாங்க விருப்பம் தெரிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.1000 பணம், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் மற்றும் கரும்புத் துண்டு ஆகியவற்றை பொங்கல் பரிசாக வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த  ஆண்டு கொண்டு வந்தது.  

அதேபோல் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.2363 கோடி நிதி ஒதுக்கி  தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ம் தேதி   சென்னையில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில்  அரிசி வாங்க விருப்பம் தெரிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு  மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு கிடையாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *