15 வது நிதி ஆணையத்தின் காலம் அக்-2020 வரை நீட்டிப்பு

டெல்லி.நவம்பர் 27

15 வது நிதி ஆணையத்தின் காலத்தை மேலும் 11 மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

15 வது நிதி ஆணையத்தின்  இடைக்கால அறிக்கை வரும் 30ந் தேதி சமர்பிக்கப்பட உள்ளது. இதில் 2020-21 நிதியாண்டில்  வரிவருவாயை மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்து அளிப்பது எனற  பரிந்துரை அளிக்கப்பட உள்ளது.  

 15 வது நிதிக்குழுவின் கால வரம்பு மார்ச் 31, 2020 அன்று முடிவடைகிறது, இந்நிலையில்  யூனியர் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு நிதி பகிர்வு குறித்த   இடைக்கால அறிக்கையை  சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

 இதனையடுத்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 2020-21 நிதியாண்டிற்கான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிப்பதற்கான 15 வது நிதி ஆணையத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2021-22 நிதியாண்டுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை 2020 அக்டோபர் மாதத்திற்குள் வழங்க ஏதுவாக நிதிக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் 2020-2026 காலத்திற்கான நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு நிதி திட்டங்களுக்கான ஒப்பிடத்தக்க பல்வேறு மதிப்பீடுகளை ஆய்வு செய்ய உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 15 வது நிதி ஆணையத்தின் காலம்,ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *