சரியானததை சரியான நேரத்தில் தெரிவிப்பேன்-பட்னாவிஸ்

மும்பை, நவம்பர்-27

மகாராஷ்டிர பேரவையில் முதல்வா் ஃபட்னாவிஸ் புதன்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டிருந்த நிலையில், துணை முதல்வா் அஜித் பவாா் ராஜினாமா, முதல்வா் ஃபட்னாவிஸ் ராஜினாமா என்று அடுத்தடுத்து திடீா் திருப்பங்கள் நிகழ்ந்தன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்ததை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர ஃபட்னாவிஸிடம், அஜித் பவார் உடன் கூட்டணி அமைத்தது தவறான முடிவாக உணர்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, யாரும் இதுவரை நடந்த எது குறித்தும் கவலைப்பட வேண்டாம். சரியானதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *