தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!!!

டெல்லி, நவம்பர்-27

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 3 மருத்துவக்கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பில் அமைய உள்ளது.

கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது.

3 மருத்துவக்கல்லூரிகளுக்கும் தலா 150 இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் 4, 600 ஆக உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *