நாளை வெளியாகிறது ரஜினியின் ”சும்மா கிழி” சிங்கிள் டிராக்!!!

சென்னை, நவம்பர்-26

பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்தது. இதைத் தொடர்ந்து ‘தர்பார்’ சரவெடி இசை தயாராகி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்தார். இப்படத்தின் முதல் சிங்கிள் டிரக்கான ‘சும்மா கிழி’ பாடல் நாளை (நவ.27)-ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், ‘சும்மா கிழி’ பாடலின் வெளியீட்டு தகவலுடன் வெளியாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் புதிய போஸ்டரில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கெத்தான நடை ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *