அஜித்பவாரை நம்பி ஏமாந்துவிட்டோம்-பட்னாவிஸ்

மும்பை, நவம்பர்-26

மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதலமைச்சராக இருந்த அஜித்பவார் ராஜினாமாவைத் தொடர்ந்து வேறு வழியின்றி தேவேந்திர பட்னவிசும் பதவி விலகியுள்ளார்.   

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அஜித் பவார், ஆதரவுக் கடிதத்துடன் தங்களை அணுகியதால் ஆட்சி அமைத்ததாகவும், ஆனால் அவர் திடீரென ஆதரவை தொடர முடியாது என்று கூறிவிட்டதாலும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பதாலும், ராஜினாமா செய்ய உள்ளதாக பட்னாவிஸ் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற தேவேந்திர பட்நவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இரண்டாவது முறையாக முறையாக முதலமைச்சராக பதவியேற்று 4 நாட்களில் தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *