அயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு இல்லை-சன்னி வக்பு வாரியம்

லக்னோ, நவம்பர்-26

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என உத்தரபிரதேச மாநில மத்திய சன்னி வக்பு வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் அறிவித்தது.

இந்த நிலையில், அயோத்தி விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக உத்தரபிரதேச சன்னி வக்பு வாரிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த சன்னி வக்பு வாரிய தலைவர் சுபர் பரூக்கி கூறியதாவது:-

வக்பு வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து பேசினோம்.  மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வதில்லை என கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். அதேசமயம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. எனவே இதுபற்றி முடிவெடுக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *