அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கூடாது – பிரதமர் மோடி
மதுரா செப்டம்பர் 11
அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் மதுராவில் ,குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களிடம் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது, குப்பைகளில் இருந்து மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் கழிவை பிரிக்கும் பணி பற்றி மோடி கேட்டறிந்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரத்தை மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் மதுராவில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, அக்டோபா 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அகற்றப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்ற சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் உதவ வேண்டும் . அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது . உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.