”ஸ்மார்ட்டாக சிந்திப்போம் சிறப்பா செயல்படுத்துவோம்” கோவையில் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம்…

கோவை, நவம்பர்-26

ஸ்மார்ட்டாக சிந்திப்போம் சிறப்பா செயல்படுத்துவோம்’ என்ற டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

50 வருட வளர்ச்சி, 5 வருடமே சாட்சி, நம்ம கோவை ஸ்மார்ட்’ என்று ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து கோவை மாநகராட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாநகர மக்களுக்கான நலத்திட்டங்களை அடுத்தடுத்து செய்துவருவதால் பெருமிதம் கொண்டுள்ள கோவை மாநகராட்சி, 50 வருட வளர்ச்சி 5 வருடமே சாட்சி என்று ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தர வரிசையில் முதன்மை பெற்றுள்ளது. 

இந்நிலையில் கோவை மக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் ‘நம்ம கோவை ஸ்மார்ட்’ என்கிற வாசகத்தை முன்னிறுத்தியதோடு, கோவை மாநகராட்சி சம்பந்தமான பிரச்சினைகளை பொது மக்களோடு இணைந்து ‘ஸ்மார்ட்டாக சிந்திப்போம் ஸ்மார்ட்டாக செயல்படுத்துவோம்’ என்கிற கோவையை சார்ந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. 

அண்மையில் கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் 50/5 என்கிற அசத்தலான போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டது. எங்கு திரும்பினாலும் நீல நிற போஸ்டரில் அமைச்சர் S.P.வேலுமணி தம்ஸ் அப் போஸ் கொடுத்த காட்சி இடம்பெற்றிருந்தது.  

கோவைக்காரர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் வகையில் ‘நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க’ என்ற வாசகமும் இதில் இடம் பெற்றிருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயலாக்கத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்ததால் இப்படி ஒரு விளம்பரமா என்று கோவைக்காரர்களிடையே பேசப்பட்டது. 

50/5 என்று குறியீடு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை பதிவு செய்திருந்த நிலையில், 50 வருட வளர்ச்சி, 5 வருடமே சாட்சி என்கிற விடையுடன் ‘நம்ம கோவை ஸ்மார்ட்டுங்க’ என்கிற வித்தியாசமான விளம்பரத்தை கோவை மாநகராட்சியே வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயலாக்கத்தில், கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்திருக்கிறது.

தமிழக அளவில், திட்ட செயலாக்கத்தில், ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ‘ரேங்க்’ வழங்கப்படும். கோவை மாநகராட்சி மீண்டும் முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே 50 ஆண்டுகள் வளர்ச்சி, 5 வருடமே சாட்சி என்ற வாசகங்களுடன் கோவை மாநகராட்சியின் விளம்பரம் தற்போது வெளியாகியிருக்கிறது. கோவையில் அரசு பேருந்துகளின் பின்புறத்தில் இதற்கான விளம்பரங்கள் அசத்தலாக இடம்பெற்றுள்ளன.

கோவை மாநகராட்சியால் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாலைகள் மேம்பாடு, புதிய சாலை பணிகள், தூய்மை பணிகள், வீதி முனைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, அப்பகுதிகளில் பூக்கோலம், மாக்கோலமிடுவது, குப்பைக் கழிவுகளை முறையாக பராமரிப்பது, பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் ரோபோவை அறிமுகம் செய்தது, கொசுக்களை ஒழிக்க Mosquitos Shooter அறிமுகப்படுத்தியது, வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கச் செய்தது என கோவை மாநகராட்சியின் மக்கள் நலப் பணிகளின் பட்டியல் நீள்கிறது. 

தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயலாக்கத்தில், கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்திருக்கிறது. கோவைக்கு 50 வருடங்களில் செய்ய வேண்டிய மக்கள் நல வளர்ச்சி பணிகளை 5 ஆண்டுகளில் இந்த அரசு செய்துள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து கூட்டங்களிலும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இதனை பிரதிபலிக்கும் வகையில், கோவை மாநகராட்சி, 50 வருட வளர்ச்சி 5 வருடமே சாட்சி என்று பெருமிதத்துடன் கருத்துருவாக்கம் செய்து வருக்கிறது. அதே நிலையில் மாநகராட்சியோடு இணைந்து பருவநிலை மாற்றம் மற்றும் பல்வேறு காரணிகளால் எழும் சுகாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மக்கள் துணையுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு கோவையை இன்னமும் பொலிவடையச்செய்ய இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *