மராட்டிய துணை முதல்வர் அஜித்பவார் ராஜினாமா!!!

மும்பை, நவம்பர்-26

மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி சிவசேனா, என்.சி.பி., காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில் நாளை (அக்.27) மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திடீரென மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். அஜித் பவார் அவருடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமக்கு பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *