அரசியலமைப்பு சட்டம் புனித புத்தகம்-மோடி பெருமிதம்

டெல்லி, நவம்பர்-26

இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டு 70வது ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதற்கான விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 26ஆம் தேதி ஓர் வரலாற்று சிறப்பு மிக்க தினம் என்று குறிப்பிட்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது என்று கூறிய அவர், மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் நாட்களையும் நினைவு கோரி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பலதரப்பட்ட மக்களின் நலன் கருதி வரையறுத்துள்ள இந்த சட்டம், இந்தியர்களின் பெருமையை நிலைநாட்டும் ஒன்று என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. 

இந்தியர்களின் உரிமைகளை எடுத்துக் கூறும் இந்த சட்டம் தான் நமக்கான புனித புத்தகம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய உன்னதம் வாய்ந்த புத்தகத்தை இந்தியர்கள் ஒருபோதும் தலை குனிய செய்ததே இல்லை என்று கூறி அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். நமது உரிமைகளையும் கடமைகளையும் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கும் இதன் மரியாதையை காக்க வேண்டியது நம் இந்தியர்களின் கடமை என்று கூறிய அவர், இத்தகைய பெருமைகளை இந்தியர்களுக்கு பெற்று தந்திருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டியது இந்தியர்களின் தலையாய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *