சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே!!!

கொச்சி, நவம்பர்-26

சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொச்சி வந்தடைந்தார். அவருடன் ஹாயா பாண்டே, காம்ப்ல்ர் ஹரிநாக்‌ஷி, மீனாக்‌ஷி ஷிண்டே, மனிஷா ஆகியோர் வந்துள்ளனர். மேலும், கடந்தமுறை சபரிமலை சந்நிதானத்தில் தரிசனம் நடத்திய கேரளத்தைச் சேர்ந்த பிந்து அம்மிணியும் விமான நிலையத்திலிருந்து திருப்தி தேசாயுடன் சேர்ந்துகொண்டார்.

பின்னர் காரில் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள், சபரிமலை செல்ல தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கமிஷனர் அலுவலக வளாகத்தில் வைத்து பிந்து அம்மிணியின் முகத்தில் ஒருவர் திடீரென மிளகாய் ஸ்ப்ரே அடித்தார். உடனே போலீஸார் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *