உதயமானது கள்ளக்குறிச்சி மாவட்டம்!!!

கள்ளக்குறிச்சி, நவம்பர்-26

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி மாதம் அறிவித்தார்.

இதற்கான அரசாணையை கடந்த 13-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயசந்திரனும் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரு கோட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய வட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது.

இந்நிலையில், மாவட்டத்தின் தொடக்கவிழா கள்ளக்குறிச்சி சாமியார் மடம் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்னார்.

முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *