வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை: செல்லூர் ராஜு

சென்னை, நவம்பர்-25

தமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து, ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்திருக்கிறார்.

இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்த அறிவுறுத்தல் தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மொத்த விற்பனைக் கடைகளில், 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தியிருக்கிறார். வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *