மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை-ராகுல்

டெல்லி, நவம்பர்-25

மஹாராஷ்டிரா அரசியலில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை என லோக்சபாவில் பேசிய காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-தேசியவாத காங்.,-காங்., கட்சிகள் தாக்கல் செய்துள்ளன மனுக்கள் மீது 2வது நாளாக இன்று விசாரணைநடத்தப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக லோக்சபாவில் பேசிய ராகுல், மகாராஷ்டிரா விவகாரத்தில் கேள்வி கேட்பதற்கு பா.ஜ.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது. மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. இது பற்றி மத்திய அரசை கேள்வி கேட்க நினைக்கிறேன். ஆனால் எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள போவதில்லை என்றார்.

இதற்கிடையில் மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *