கர்நாடகா போல் மராட்டியத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்க முயலுகிறது-பிரியங்கா காந்தி

டெல்லி, நவம்பர்-25

மகாராஷ்டிரா மாநில அரசியல் நிலவரம் குறித்து காங்கிர்ஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பாஜகவை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முயல்கிறது. அரசிலமைப்புச் சட்ட அமைப்புகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் புறக்கணித்துள்ளது பாஜக என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் பாஜக என்ன விளையாட்டு விளையாடியதோ அதையேதான் மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்துகிறது

12 ஆயிரம் விவசாயிகள் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு பாஜகவின் பாக்கெட்டில் இருந்து இதுவரை ஒரு உதவியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பொதுப்படையாக எம்எல்ஏக்கள் கடத்தப்படுவதைப் பார்க்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்களா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *