அஜித்பவாரின் முடிவு கட்சியின் முடிவு இல்லை-சரத்பவார், உடைகிறதா? தேசியவாத காங்.

மும்பை, நவம்பர்-23

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக பத்வியேற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால், ஒரே இரவில் நிலைமை தலைகீழாக மாறியது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் ஒப்புதல் இல்லாமல், அஜித் பவார் ஆலோசனை நடத்தி பாஜகவுக்கு ஆதரவு அளித்திருக்க முடியாது என்று தகவல் வெளியானது. ஆனால், இதனை சரத் பவார் மறுத்தள்ளார். 

‘பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ள அஜித் பவாரின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல. அஜித் பவாரின் இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை’ என்று சரத் பவார் கூறியுள்ளர்.

இதனால் மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அஜித் பவார் தன்னிச்சையாக பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பதால் அக்கட்சியில் சலசலப்பு உருவாகி உள்ளது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், கட்சி உடையும் சூழல் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *