பிரகாசமான எதிர்காலத்திற்காக பாஜக – தேசியவாத காங். இணைந்து செயல்படும்: மோடி

டெல்லி, நவம்பர்-23

மஹாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு பா.ஜ.க. தேசியவாத காங்கிரஸ் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் பதவியேற்றுள்ளார். நேற்று வரை உத்தவ் தாக்கரே முதல்வராக விருப்பம் தெரிவித்திருந்த சரத்பவார், திடீரென இன்று காலை பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளது. மராட்டிய மாநில முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவாருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரகாசமான எதிர்காலத்திற்காக பாஜக – தேசியவாத காங்கிரஸ் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *