சினிமா கூத்தாடிகளால் ஒன்றும் செய்யமுடியாது: ரஜினி கமலை சாடிய சு.சாமி

சென்னை, நவம்பர்-23

சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும், படத்தின் பப்ளிஷிட்டிக்காகவே ரஜினி அரசியலுக்கு வர போவதாக கூறி வருவதாகவும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் பல கேள்விகள் எழுப்பினர்.

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என நினைக்கிறீர்களா?: சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவரது சினிமா ரிலீஸ் ஆகப் போவதால் பப்ளிஷிட்டிக்காக அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கலாம். இதற்கு முன் எத்தனையோ முறை அரசியலுக்கு வர போகிறேன், வர போகிறேன் சொல்லி இருப்பார். இது பண்ண போகிறேன், அது பண்ண போகிறேன் என சொல்லி இருக்கிறார். கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை.

மக்கள் நலனுக்காக இணைவோம் என ரஜினி-கமல் கூறி உள்ளனர்?: இது போன்ற சினிமா டயலாக்குகளை கேட்டு அலுத்து விட்டது. அரசிலுக்கு வருவேன் என ரஜினி கூறியும் எதுவும் நடக்கவில்லை.

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என ஒரு தகவல் வந்துள்ளதே? அது பற்றி எனக்கு தெரியாது. அது பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த வழக்கு தொடர்ந்ததில் எனக்கு பங்கு உண்டு. அதிகபட்சம் ஓராண்டிற்குள் எல்லாம் முடிந்து விடும். அதிமுக. வை நல்லமுறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு உண்டு. சசிகலா வெளியில் வந்தால் நிச்சயமாக அதிமுக.,வினர் அனைவரும் சசிகலாவிடம் தான் போவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *