இந்தியா-வங்கதேசம் பகலிரவு டெஸ்ட் போட்டி: வங்கதேசம் ஆல் அவுட்!!!

கொல்கத்தா, நவம்பர்-22

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்  இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இப்போட்டியை காண வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த அழைப்பை ஏற்று, வங்கதேச பிரதமர் சேக் ஹசினா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடக்க நாளான இன்று மைதானத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் 2 பேரும் மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியினரால் இந்திய வீரர்களின் புயல்வேக பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 60 ரன்களை எடுப்பதற்குள் முக்கிய விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து விட்டது.

இதையடுத்து, வங்காளதேசம் அணி உணவு இடைவேளை வரை 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. உணவு இடைவேளையை தொடர்ந்து, ஷமியும், இஷாந்த் சர்மாவும் அதிரடியாக பந்து வீச்சை தொடர்ந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *