என்னை நீக்கினால் தினகரனுக்கே இழப்பு – புகழேந்தி
சென்னை செப்டம்பர் 10 :
அமமுகவில் இருந்து என்னை நீக்கினால் டிடிவி தினகரனுக்குத்தான் இழப்பு என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக உள்ள புகழேந்தி, தி.மு.க.வுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொலைபேசியில் பேட்டியளித்த புகழேந்தி கூறியதாவது, டிடிவி தினகரன் என்னைப் போ என்றால் சசிகலா என்னை வா என்பார். சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும்.
டிடிவி தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை.

கோவையில் நான் பேசியது உண்மைதான். கட்சியின் தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகிகள் தான் எனக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவர்கள் விரலைக்கொண்டு அவர்களது கண்ணை குத்தி உள்ளனர்.என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு தான் பேரிழப்பு ஏற்படும்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.