வெளியானது ஆதித்ய வர்மா: துருவ் விக்ரம் அசத்தல் என நெட்டிசன்கள் பாராட்டு

சென்னை, நவம்பர்-22

கிரிசாயா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பானிடா சந்து, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி, மற்றும் அதன் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்த நிலையில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்தது. ஆதித்ய வர்மா படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

துருவ் விக்ரம் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி படத்தில் மாஸ் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கோவக்கார இளைஞனாகவும், காதலில் வெறிப்பிடித்து இருக்கும் இளைஞராகவும் நடித்துள்ளார்.

படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கொடுத்திருக்கும் விமர்சனங்களை பார்க்கலாம். சியான் விக்ரமின் நடிப்பை கண்டு அசந்து போகாதவர்கள் இந்திய சினிமாவிலேயே இருக்க முடியாது. அதுபோல தான் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல அவுட்புட்டை கொடுத்துள்ளார் துருவ் விக்ரம். ஆதித்ய விக்ரம் ஒரு பக்கவான ரீமேக் படம் என்றும், ஹோலிவுட்டில் ஒரு புதிய கனவு ஹீரோ கிடைத்துவிட்டார் என நெட்டிசன்கள் பலர் துருவ் விக்ரமை பாராட்டி வருகின்றனர். துருவ் விக்ரமுக்கு இது முதல் படம் மாதிரியே தெரியல, நன்கு தேர்ந்த நடிகர் போல நடித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரீமேக்காக இருந்தாலும் அப்படியே இல்லாமல், தமிழில் சில மாறுதல்களை கொடுத்து கதையை இயக்குநர் செதுக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *