கேரளாவில் ஜனவரி 1முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

திருவனந்தபுரம்.நவம்பர்.21

ஜனவரி 1ம் தேதி முதல் கேரளாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.   முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுற்றுச் சூழல்  பாதுகாப்பை கருத்தில்  கொண்டு பிளாஸ்டிக்   பொருட்கள் பயன்படுத்துவதை  முற்றிலும் தடுப்பது குறித்து   ஆலோசிக்கப்பட்டது.   இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பது என்றும்  அதே நேரத்தில், மாநிலத்திற்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களான கேரள கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் கேரள மாநில மதுபானங்கள் கார்ப்பரேஷன் கீழ் வரும் நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இரு நிறுவனங்களும் தாங்கள் விநியோகிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 இந்த புதிய நடைமுறை ஜனவரி 1, 2020 முதல் நடைமுறை படுத்தப்படும் என்று  கேரள அரசு  வெளியிட்டுளள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *