ரஜினியின் வெற்று பிம்பம் தூளாகும் அதிசயம் தான் நடக்கும்-சீமான் பதிலடி

சென்னை, நவம்பர்-21

2021-ல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினி கூறியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் கூறும் கருத்துகள் பேசுபொருளாகவே மாறி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 2021-ல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என கூறினார். ரஜினியின் இந்த பேச்சும் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளையும், பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஜினியின் பேச்சுக்கு சீமான் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *