முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு கருத்து கூறலாம்-முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி, நவம்பர்-21

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே ரஜினி அதிசயம் என கூறியிருக்கலாம். ரஜினிகாந்த் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என்று கூறுகிறார் என தெரியவில்லை, முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு கருத்து கூறலாம். நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். அதிமுக சேர்ந்தவர் தான் 2021-ல் முதல்வராக பதவியேற்பார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

மறைமுக தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக தேரதல் என்பதை கொண்டு வந்தேதே திமுக தான். தமிழகத்தில் மறைமுக தேர்தலை நியாயப்படுத்தி மு.க.ஸ்டலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். மேயர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் வேறு கட்சியாகவும் இருப்பதால் பிரச்சனை என ஸ்டாலினே கூறியுள்ளார். 2006ல் ஸ்டாலின் சொன்னால் சரி என்கிறார்கள், நாங்கள் செய்தால் தவறு என்கிறார்கள். தேர்தலில் மக்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுக்கு ஓட்டுப்போடுவார்கள். 

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *