ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியது பா.ஜ.க. தான்:அமித்ஷா

ராஞ்சி, நவம்பர்-21

நக்சல்களின் பிடியில் இருந்த ஜார்க்கண்ட்டை மீட்டு தனி மாநிலமாக உருவாக்கிய பெருமை பாஜகவையே சாரும் என அக்கட்சியின் தலைவர் அமித்ஷா பேசினார்.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.

இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநில தேர்தலையொட்டி பாஜக தலைவர் அமித் ஷா பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: ‘‘மிகவும் பின்தங்கிய பகுதியான ஜார்க்கண்டை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இதற்காக பலர் உயிர் இழந்துள்ளனர். பலர் தியாகம் செய்துள்ளனர். பிர்ஸா முண்டா காலத்தில் இருந்து நடந்த போராட்டத்திற்கு வெற்றி தேடி தந்தது பாஜக தான்.

காங்கிரஸ் அதனை செய்ய முன்வரவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரகுபர் தாஸ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் மிகுந்த வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *