2021 சட்டமன்ற தேர்தலில் அற்புதம் நிகழும்-ரஜினி ஆருடம்

சென்னை:

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம். இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். கமலுடன் கூட்டணி அமைத்தால் யாருக்கு அதிகாரம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில், அரசியல் சூழ்நிலைகளை பொருத்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *