மக்களை அச்சுறுத்தும் போஸ்டர்கள் – காஷ்மீரில் 8 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு, செப்-10

ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை விநியோகிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போஸ்டர் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சோப்பூரில் பழ வியாபாரி வீட்டிற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 2 வயது குழந்தை உள்ளிட் 4 பேரை படுகொலை செய்த இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 8 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *