உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: வைகோ கண்டனம்

சென்னை, நவம்பர்-21

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பித்துள்ள தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்துள்ள அ.இ.அ.தி.மு.க., அரசு, உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.

உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யும் முறை என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறித்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடைபெற வேண்டுமானால் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் மேயர்களாக, நகர்மன்ற, பேரூராட்சி மன்றத் தலைவர்களாக தேர்வு செய்யப்படுவதுதான் சாலச் சிறந்தது ஆகும். என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *