மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமதாசை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரிப்பு

 சென்னை.நவம்பர்.20

அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க நிறுவனர் ராமதாசை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்  மருத்துவர்  ராமதாசுக்கு  காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக செவ்வாய் அன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ராமதாசை சந்தித்தார். அவரது  உடல்நலம் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் உடனிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *