சென்னை திரும்பினார் முதல்வர்

14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். அரசு முறை பயணமாக 14 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தது வெற்றி அடைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-10

அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். முதலில் இங்கிலாந்திற்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் சென்றார். அங்கு தொழில் முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை எடுத்துரைத்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கில் பேசும்போது, ‘இந்தியாவிலேயே முதலீடு செய்ய ஏற்ற மாநிலம் தமிழகம் தான்’ என்று கூறினார். இதையடுத்து புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டதோடு, அதுதொடர்பான தொழில்நுட்பங்களையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து இங்கிலாந்து நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் தமிழ் தொழில் அதிபர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 80 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிலையில் முதல்வர் தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சி மகிழிச்சியை தந்தது. வெளிநாட்டு அரசு முறை பயணம் தொடரும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலர் ஆர்வத்தில் உள்ளனர். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவுள்ளன. உலகில் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசு முறை பயணம் வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *