ஜம்மு – காஷ்மீரில் முழுமையான இணையதள சேவை வழங்க நடவடிக்கை: அமித்ஷா

 டெல்லி.நவம்பர்.20

ஜம்மு –  காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், உரிய நேரத்தில் முழுமையான இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் 3 வது நாளான இன்று மாநிலங்களவையில் ஜம்மு –  காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு அமித்ஷா பதிலளித்து பேசினார். அப்போது   சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு –  காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது.195 காவல் நிலையப்பகுதிகளில்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்றார்.

அதிகாரிகளின் பரிந்துரைகளின் படியும்,  பாதுகாப்பு  நிலைமையை கருத்தில் கொண்டும் உரிய நேரத்தில் இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பட்டார். சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் ஒரு உயிரிழப்பு சம்பவம் கூட ஏற்படவில்லை, பள்ளதாக்குப் பகுதிகளில் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறிய அமித்ஷா, மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அரிசி,சமையல் எரிவாயு ,பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. உருது மற்றும் ஆங்கில நாளேடுகள் மக்களுக்கு கிடைக்கப் பெறுவதாகவும் தொலைகாட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *