சபரிமலை கோயிலுக்கு தனிச்சட்டம் உருவாக்க உச்ச நீதிமன்றம் ஆணை

 

டெல்லி.நவம்பர்.20

சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில்  அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என்று  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து  தொடரப்பட்ட 65  சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை கடந்த 14 ந்தேதி  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு  முன்பு நடைபெற்றது.   அப்போது அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு தொடரும் என்ற தெரிவித்தனர். மேலும்  வழக்கினை 7 நீதிபதிகள் கொண்ட  விரிவான அமர்வுக்கு   மாற்றி உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது. ஆனாலும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கேரள அரசு அறிவித்தது.

இதனால், தரிசனத்திற்கு வரும் பெண்கள் பம்பையிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவில், குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும் என்றும்  ஜனவரி 3ம் வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *