ரஜினியும், கமலும் கானல் நீர் போன்றவர்கள்-ஜெயக்குமார் தாக்கு

சென்னை, நவம்பர்-20

தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை துவங்கி 3 பிரிவுகளாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

பின்பு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மறைமுக உள்ளாட்சி தேர்தல் குறித்தான தகவல் உறுதியானது அல்ல. கற்பனை. முறையாக அரசாணை வெளியீடு இல்லை. இடைத்தேர்தலுக்கு பிறகு திமுக பயம் அடைந்துள்ளது. இது தேராது என்று அவர்களுக்கே தெரிந்துவிட்டது அதனால் உள்ளாட்சி தேர்தலை கண்டு அஞ்சிக்கிறார்கள்.

ரஜினி கமல் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு பிரச்னை இல்லை. இவர்கள் அனைவரும் மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கூட்டமாக வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி. அதிமுக வலுவான கூட்டணி. 58 % வரை அதிமுகவிற்கு வாக்களர்கள் உயர்த்துள்ளனர். அஜித் ஒரு நாகரிகமான, பண்பான மனிதர். தன் தொழில் மீது மட்டும் கவனம் செலுத்துவர். ரஜினி, கமலை நம்பி பின் செல்பவர்கள் கானல் நீரை போல ஏமாந்து போவார்கள்.

அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுடன் முடிவடைந்து விட்டது இனி பாஜக தலைமையிலான கூட்டணி தான் என்ற பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோது பியூஷ்கோயல் கூறியதை பொன் ராதாகிருஷ்ணனுக்கு நினைவு படுத்தவேண்டும்.  எப்பொழுதுமே அதிமுக தலைமையிலான கூட்டணி தான் தொடரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *