கோவையை கலக்கும் அமைச்சர் S.P.வேலுமணியின் 50/5 வித்தியாசமான போஸ்டர்!!!

கோவை, நவம்பர்-20

கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இன்று ஒட்டப்பட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் 50/5 என்கிற அசத்தலான போஸ்டர்ஸ் வைரலாகி வருகிறது. எங்கு திரும்பினாலும் நீல நிற போஸ்டரில் அமைச்சர் S.P.வேலுமணி தம்ஸ் அப் போஸ் கொடுக்கிறார்.

அண்மையில் மழைநீர் சேகரிப்பு வீடியோ ஒன்றில் டீசர்ட்டில் வித்தியாசமான கெட்டப்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து பேசி அனைவரையும் அசத்திய அமைச்சர் வேலுமணி தற்போது இது வரை நாம் பார்க்காத தம்ஸ் அப் போஸில் இடம் பெற்றுள்ளார்.

கோவைக்காரர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் வகையில் ‘நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க’ என்ற வாசகமும் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயலாக்கத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்ததால் இப்படி ஒரு விளம்பரமா என்று கோவைக்காரர்கள் ஆச்சரியமாக பேசிக்கொள்கிறார்கள்.         

தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயலாக்கத்தில், கோவை மாநகராட்.சி முதலிடம் பிடித்திருக்கிறது. தமிழக அளவில், திட்ட செயலாக்கத்தில், ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ‘ரேங்க்’ வழங்கப்படும். கோவை மாநகராட்சி மீண்டும் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உக்கடம் பெரிய குளத்தில் செய்யப்பட்டு வரும் பணிகள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அதனை நேரில் பார்வையிட, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஆகியோர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் நம்ம கோவைனா ஸ்மார்ட்டுங்க என்று அமைச்சர் S.P.வேலுமணி இடம் பெற்ற போஸ்டர்கள்கோவைக்காரர்கள் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அதற்கு காரணம் என்னவென்றால், 50/5 என்று குறியீடு தவறாக இருப்பது தான். அது எதற்கு? என்ன அர்த்தம்? அமைச்சர் இடம் பெற்ற போஸ்டரில் இப்படி புரியாத மாதிரி 50/5 என்று குறிப்பிடப்பட்டது ஏன் என்று பேசுகிறார்கள்.

ஒருவேளை 5-ல் வளையாதது 50-ல் வளையுமா? என்ற அர்த்தத்தில் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்புகிறார்கள்.

இது விளம்பர உத்திகளில் பயன்படுத்தும் டீசர் விளம்பரமாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த ஐம்பதுக்கு கீழ் ஐந்து குறியீட்டுக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *