உள்ளாட்சித் தேர்தலில் 13 மாநகராட்சிகளில் அதிமுக போட்டி ?

சென்னை.நவம்பர்20

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்ளிட்ட 13 மாநகராட்சிகளில், மேயர் பதவிக்கு  போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறகிறது.

 தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கையை,  டிசம்பர் மாதம் 13ந் தேதிக்குள் வெளியட வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து  தேர்தல் வியூகங்கள்,கூட்டணி கட்சிகளுக்கு   தொகுதி ஒதுக்குவது குறித்த முக்கிய ஆலோசனைகளில்  அதிமுக, திமுக, உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில் திமுக  சார்பிலும்  உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள்  வரும் 27ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 19.11.2019 அன்று , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை, மறைமுகமாக தேர்ந்தெடுக்க   முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அவசர சட்டம்  கொண்டு வரவும் அமைச்சரவை கூட்டத்தில்  முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தமிழத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில், ஆவடி, நாகர்கோயில் தவிர, சென்னை,மதுரை,கோவை,திருச்சி,சேலம்,திருப்பூர்,திருநெல்வேலி, ஈரோடு,வேலூர்,தூத்துக்குடி,திண்டுக்கல்,தஞ்சை,ஓசூர் ஆகிய 13 மாநகராட்சிகளில்,  மேயர் பதவிக்கு  அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என அக்கட்சியின்  தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு ஆவடி மாநகராட்சியும், பா.ஜ.க.வுக்கு,  நாகர்கோயில் மாநகராட்சியும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.  மேலும் துணை மேயர் பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 5   இடங்களை மட்டும் ஒதுக்கீடு செய்து விட்டு 10   இடங்களில் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக உள்ளிட்ட ஏனைய கூட்டணி கட்சிகளுக்கு  துணை மேயர் மற்றும் சில நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவர்  பதவிகளை  ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

எனினும்  பாமக வடமாவட்டங்களில்  முக்கிய நகராட்சிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய ஊராட்சி அமைப்புகளில்  கனிசமான  இடங்களை  ஒதுக்க வேண்டும் என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. அதேவேளையில் பாஜக, தேமுதிக,தமாகா,புதிய நீதிகட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் குறிப்பிட்ட இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று  அதிமுகவிற்கு கோரிக்கை விடுக்கும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *