மக்களின் நலனுக்காக கமலுடன் இணைய தயார்-ரஜினி அதிரடி

சென்னை, நவம்பர்-19

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்த மத்திய அரசு, இந்த விருது, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. நாளை நவம்பர்-20ம் தேதி கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கவுள்ளது. விருதை பெறுவதற்காக ரஜினிகாந்த் கோவா-க்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  தமிழக மக்களின் நலனுக்காக கமலுடன் இணைந்து பயணிக்கும் சூழல் வந்தால் இருவரும் இணைந்து பயணிப்போம், ஓ.பன்னீர்செல்வம் என்னை விமர்சிப்பது அவருடையை தனிப்பட்ட கருத்து, அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவிக்கும் போதே, தனிக்கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என ரஜினி கூறியிருந்தார். ஆனால், தற்போது மக்களின் நலனுக்காக கமலுடன் இணைந்து பயணிக்க தயார் என கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக ரஜினியுடன் இணைந்து பயணிக்க தயார் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *