ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி

ஜெய்ப்பூர், நவம்பர்-19

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 961 இடங்களிலும், பாஜக 737 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 386 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜஸ்தானில் 24 மாவட்டங்களுக்குட்பட்ட 49 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்கிழமை) வெளியானது. இதுகுறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ஷ்யாம் சிங் ராஜ்புரோஹித் வெளியிட்டார்.

அதன்படி மொத்தமுள்ள 2105 வார்டுகளில் 14 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிகப்படியாக காங்கிரஸ் கட்சி 961 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக 737 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

சுயேச்சை வேட்பாளர்கள் மொத்தம் 386 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *